கானக்குயில் - கரோக்கே தமிழீழ எழிற்சிப்பாடற் போட்டி விதிமுறைகள்.


போட்டி விதிமுறைகள்

பாலர், கீழ், மத்திய, மேல், ஜோடிப்பாடல் போன்ற பிரிவுகளாகப் போட்டிகள் நடாத்தப்பட்டு கானக்குயில் 2020 விருதினைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு கானக்குயில் 2020 என்னும் விருது வழங்கி மதிப்பளிக்கப்படுவதுடன் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2021 நிகழ்வில் பாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படும்.


பாலர், கீழ் என்ற இரு வகையான போட்டிகளிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் மூவர் தெரிவு செய்யப்பெற்று இளம் கானக்குயில் 2020 விருதுக்கான போட்டி நடைபெறும்.


மத்திய, மேல் என்ற இரு வகையான போட்டிகளிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் மூவர் தெரிவு செய்யப்பெற்று கானக்குயில் 2020 விருதுக்கான போட்டி நடைபெறும்.


இறுதிப்போட்டியில் போட்டியாளர்களின் விருப்பத்திற்கேற்ப தமிழீழ எழுச்சிப்பாடல்களைத் தெரிவு செய்து பாட முடியும் என்பதோடு அவற்றை முற்கூட்டியே தெரியப்படுத்துதல் அவசியமாகும்.


ஒரு பிரிவில் கூடுதலான போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் குழுப்போட்டிகள் இரு பிரிவுகளாக நடாத்தப்படும்.


போட்டியாளர் ஒருவர் தெரிவு செய்த பாடலை இன்னொரு போட்டியாளர் ஒரே பிரிவில் தெரிவுசெய்ய அனுமதிக்கப்படமாட்டாது. முதலில் பாடலை தெரிவுசெய்து அனுப்பியவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.


போட்டியாளர் தெரிவுசெய்யும் பாடல் தமிழீழ எழுச்சிப்பாடலாக அமைவதோடு தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியீட்டுப்பிரிவினரால் வெளியிடப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.


விண்ணப்பங்களுடன் அடையாள அட்டைப்பிரதி இணைக்கப்பட வேண்டும், இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


போட்டியாளர் ஒருவர் தெரிவு செய்த பாடலை இன்னொரு போட்டியாளர் ஒரே பிரிவில் தெரிவுசெய்ய அனுமதிக்கப்படமாட்டாது. முதலில் பாடலை தெரிவுசெய்து அனுப்பியவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.


விண்ணப்பக்கட்டணம் தனிப்பாடலுக்கு முப்பது (30) பிராங்குகள் என்பதோடு ஜோடிப்பாடலுக்கு நாற்பது (40) பிராங்குகளும் ஆகும். போட்டியாளர்கள் விண்ணப்பக் கட்டணத்தினை நிகழ்வு மண்டபத்தில் செலுத்தலாம்.


போட்டியாளர்கள் தமக்குரிய விண்ணப்பங்களை www.kaanakkuyil.com என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும். அடையாள அட்டைப்பிரதி, பாடல்வரிகள், விண்ணப்பிக்கும் போது இணைத்தல் வேண்டும். கரோக்கி இசை மாத்திரம் பின்னர் அனுப்பிவைப்பதோடு நிகழ்வின் அன்றும் கொண்டுவருதல் அவசியமாகும்.


நடுவரின் தீர்ப்பே இறுதியானது.


விண்ணப்ப முடிவுக்திகதி: 17.04.2020 வெள்ளிக்கிழமை

வயதெல்லை:


  • பாலர் பிரிவு (2011 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்)

  • கீழ்ப்பிரிவு (2006 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்)

  • மத்திய பிரிவு (2001 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்)

  • மேற்பிரிவு (1998 அல்லது அதற்குப் முன் பிறந்தவர்கள்)

  • ஜோடிப்பாடல் - 15 வயதிற்குட்பட்டோர் (2004 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்)

  • ஜோடிப்பாடல் - 16 வயதிற்கு மேற்பட்டோர்(2003 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்)